வட தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் தற்காலிக நிறுத்தம்

கடந்த வாரம் முழுவதும் சென்னை மற்றும் வட தமிழகத்தின் பிற பகுதிகளை தாக்கிய வெப்ப அலை தற்பொழுது சற்று அடங்கி உள்ளது.

மத்திய வங்க கடல் உருவாகி உள்ள மேல் அடுக்கு காற்று சுழற்சி வட தமிழத்தின் உட்புற பகுதிகளில் நேற்று பலத்த இடி மழை பொழிய வழி வகுத்தது. இது மேலும் சில நாட்களுக்கு நிலை பெற்று தமிழக கரை ஓரம் நகர கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் வெப்பம் சற்று மிதமாகவே நிலவ கூடும். உட்புற பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Weather_map

சென்னையை பொருத்த வரை வெப்பம் 40 டிகிரி அளவே நிலவ கூடும். ஞாயிறு அன்று மழை பொழிய வாய்ப்பு உள்ளது.