கடலோர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

கடந்த ஓர் வாரமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கடலோர தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும்.

வட கடலோர தமிழகம் மற்றும் தென் ஆந்திர பகுதிகளில் காலை மற்றும் இரவு பொழுதில் மழை வாய்ப்பு உள்ளது.  இது ஓரிரு இடங்களில் சில நிமிடம் நீடிக்க கூடும்.  பரவலான மழை வாய்ப்பு குறைவே.  இதே போல் கண மழைக்கான வாய்ப்பும் குறைந்தே காண படுகிறது.

நேற்று பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளில் இரவு சற்றே மிதமான மழை பெய்தது.  குறிப்பாக கேளம்பாக்கம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு நிமிடங்கள் சற்று பலமான மழை பெய்தது.  இன்றும் சென்னை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் சில இடங்களில் சாரல் மழை பெய்ய கூடும்.