தென் இந்தியாவில் பகல் நேர வெப்பம் அதிகரிக்க கூடும்

கடந்த ஓரிரு வாரங்களாக தென் இந்தியாவில் பொதுவாக மிதமான தட்பவெப்ப நிலை நீடித்து வந்தது. குறிப்பாக இரவு மற்றும் காலை நேரங்களில் பல பகுதிகளில் குளிரின் தாக்கம் இருந்தது.

தைப்பொங்கல் முதல் உத்தராயணம் துவங்கி உள்ள நிலையில் வட துருவ பகுதிகள் சூரியனின் வரவை எதிர்நோக்க துவங்கி உள்ளது.  இதன் முதல் கட்டமாக தென் இந்தியாவில் பகல் நேர வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.  கால மாற்றத்தின் முதல் செயல் இது என நாம் கருத்தில் கொள்ளலாம்.

Slide2

அடுத்த சில தினங்களுக்கு மேற்கு கடலோர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்க கூடும்.  குறிப்பாக கொங்கன் கடற்கரை பகுதிகளில் சில இடங்களில் பகல் நேர வெப்பம் 36° விட அதிகமாக இருக்க கூடும். தெலுங்கான மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளிலும் இதே போல் இருக்க கூடும்.

தமிழகத்தின் உட்புற பகுதிகளில் சில இடங்களில் 35° வரை பகல் நேர வெப்பம் எட்ட கூடும்.  குறிப்பாக தென் தமிழக பகுதிகளில் வெப்பம் சற்று அதிகமாக இருக்க கூடும்.

Slide4

இரவு நேர வெப்ப நிலையில் பெரிய மாற்றம் எதுவும் தற்பொழுது நிலவ வாய்ப்பு இல்லை.  உட்புற பகுதிகளில் 17° அளவில் குறைந்த இரவு நேர வெப்ப நிலை நீடிக்க கூடும்.  கடலோர பகுதிகளில் 22°அளவில் இரவு நேர வெப்ப நிலை இருக்க கூடும்.