தமிழகத்தில் இரவு நேர வெப்ப நிலை சற்று குறைய கூடும்

தமிழகத்தில் இந்த ஆண்டு குளிர் காலம் சராசரி அளவை விட சற்று வெப்பம் அதிகமாகவே இருந்து வந்துள்ளது. உட்புற பகுதிகளில் கூட ஒரு சில தினங்களே குளிரின் தாக்கம் அதிகமா நிலவியது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் பிறந்து விட்ட நிலையில் சூரியனின் ஓட்டத்திற்கு ஏற்ப இந்திய துணைகண்டம் வெப்பநிலையில் மாறுபட துவங்கும்.  இதன் காரணமாக குளிர் தாக்கத்தின் வாய்ப்பு குறைய துடங்கும். இந்நிலையில் அடுத்த ஒரு சில தினங்களுக்கு இரவு நேர வெப்ப நிலை தமிழகத்தில் சற்று குறைத்து காணப்படும்.

1_2

தென் இந்தியாவில் பரவலாக பகல் நேர வெப்ப நிலை சற்று அதிமாகவே காணப்படும்.  குறிப்பாக தெலுங்கனா மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை 37° வரை சில இடங்களில் எட்ட கூடும்.  வடக்கு தெலுங்கானாவில் அடிலாபாத் மற்றும் நிர்மல் ஆகிய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமா நிலவ கூடும். தமிழகத்தில் பொதுவாக சற்று மிதமான வெப்பம் நிலவி வரும். உட்புற பகுதிகளில் வெப்பநிலை கடலோர பகுதிகளை விட அதிகமாக காணப்படும்.

1_2_1

இரவு நேர வெப்ப நிலை தென் கர்நாடகா, ராயலசீமா மற்றும் வடமேற்கு தமிழகத்தில் சற்று குறைந்து காணப்படும். தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக 18/19° வரை நிலவி வந்த இரவு நேர வெப்ப நிலை 16/17° வரை அடுத்த ஒரு சில தினங்களுக்கு குறைய கூடும்.  இதே போல் வட தமிழகத்தில் பிற பகுதிகளிலும் ஓரிரு டிகிரி வரை இரவு நேர வெப்ப நிலை குறைந்து காணப்படும்.