சென்னையில் காலை நேர மித வானிலை மேலும் ஓரிரு நாட்கள் நீடிப்பு

நேற்று தமிழகத்தில் பரவலாக இரவு நேர வெப்ப நிலை குறைந்து காணப்பட்டது.  குறிப்பாக வட மேற்கு தமிழகத்தில் கிட்டதட்ட 2 – 5° வரை குறைந்தது.  திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி பகுதிகளில் 17° வரை குறைந்தது. சென்னையிலும் நேற்று காலை மிக மிதமான வானிலை நிலவியது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது. நேற்று நிலவிய இரவு நேர வெப்ப நிலையை காட்டிலும் சற்றே குறைந்து காணப்பட்டது.    

2_2

பகல் நேரத்தில் நிலவி வரும் தெளிந்த வானிலை காரணமாக தென் இந்திய தீபகற்ப பகுதிகளில் இரவு நேரத்தில் உயர்ந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி நன்கு அமைவதால் சென்னைக்கு மேற்கிலிருந்து நிலக்காற்று அதிகாலை நேரத்தில் வீசுவதால் வெப்ப நிலை குறைய ஏதுவாகிறது.

இந்த நிலை மேலும் ஓரிரு நாட்கள் நீடிக்கும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  அடுத்த ஓரிரு தினங்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் வட உட்புற பகுதிகளில் மிதமான வெப்ப நிலை இரவு மற்றும் காலை நேரங்களில் நீடிக்க கூடும்.

பகல் நேர வெப்ப நிலை கடந்த சில தினங்களாக சற்று உயர்ந்து வருகிறது, இது மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கலாம். தெலுங்கனா மற்றும் ஆந்திராவின் உட்புற பகுதிகளில் இன்றும் வெப்ப அலை தாக்கம் இருக்க கூடும்.