கடலோர தமிழக பகுதிகளில் இரவு நேர வெப்ப நிலை சற்றே உயர கூடும்

கடந்த ஓரிரு தினங்களாக தமிழகத்தின் அனேக இடங்களில் இரவு நேர வெப்ப நிலை சற்று குறைந்து காணப்பட்டது.  குறிப்பாக உட்புற பகுதிகளில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாகவே நிலவியது.  நேற்று இரவு தரம்புரியில் 13.7°  வரை இரவு நேர வெப்பம் குறைந்தது.  இதே போல் திருப்பத்தூர் பகுதிகளில் 14° வரை எட்டியது.  கடலோர பகுதிகளிலும் காலை பொழுதில் மிதமான வெப்ப நிலை இருந்தது.

இந்த நிலை இந்த வார இறுதி முதல் சற்றே மாற துவங்கும்.  குறிப்பாக கடலோர பகுதிகளில் இரவு நேர வெப்ப நிலை ஓரிரு டிகிரி உயர கூடும். காலை பொழுதில் நிலவி வரும் குளிரின் தாக்கம் குறைய துவங்கி கோடை காலத்தின் முன்னோடியாக வெப்ப நிலை உயர துவங்கும்.

4_2

பகல் நேர வெப்ப நிலை தென் இந்தியாவின் அனேக பகுதிகளில் சற்று உயர்ந்தே காணப்படும். குறிப்பாக தெலுங்கனா, ராயலசீமா, உட்புற கர்நாடகா  மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில் வெப்பநிலை அதிகமா இருக்க கூடும்.  தமிழகத்தின் உட்புற பகுதிகளில் ஒரு சில இடங்களில் பகல் நேர வெப்பம் 35° வரை எட்ட கூடும்.  கிழக்கு கடலோர பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை மிதமாக இருக்க கூடும்.

4_2_1

இரவு நேர வெப்ப நிலை கடந்த சில தினங்களை விட சற்றே உயர்ந்து காணப்படும். உட்புற தமிழகத்தின் குளிர் தாக்கம் குறைய துவங்க வாய்ப்பு உள்ளது.  சென்னையில் பகல் நேர வெப்ப நிலை 32° அளவிலும் இரவு நேர வெப்ப நிலை 23° அளவிலும் இருக்க கூடும்.