தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை சற்று குறையக்கூடும்

தென் இந்தியாவில் இந்த மாத இறுதி முதல் பகல் நேர வெப்ப நிலை சற்றே உயர்ந்து இருந்தது. குறிப்பாக தக்காண பீட பூமியின் உட்புற பகுதிகளில் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உட்புற கர்நாடகாவில் சில இடங்களில் பகல் நேர வெப்பம் 37° வரை எட்டியது. இதே போல் தமிழகத்திலும் சேலத்தில் இரு தினங்களுக்கு முன் 35° அளவை இந்த ஆண்டில் முதல் முறையாக எட்டியது.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்கள் சற்றே மேக மூட்டமாக இருக்க வாய்ப்பு இருப்பதால் பகல் நேர வெப்பநிலை சற்று குறைய கூடும். பொதுவாக தென் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைய கூடும்.

6_2பகல் நேர வெப்ப நிலை வரைபடத்தை நாம் ஆராய்ந்தோம் எனில் மிதமாகும் வெப்ப நிலை தெளிவாக தெரிகிறது. குறிப்பாக ஆந்திர மற்றும் தெலுங்கானா பகுதிகளில் நிலவி வந்த வெப்ப தாக்கம் குறைந்து சற்றே மிதமான வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது.  இதே போல் தமிழகத்தில் அனேக இடங்களில் பகல் நேர வெப்ப நிலை 32 / 33° அளவில் நீடிக்க கூடும்.  ஓரிரு இடங்களில் சற்றே உயர்வாக இருக்க வாய்ப்பு உள்ளது.

6_2_1

இரவு நேர வெப்ப நிலையில் குளிர் காலம் விடை பெரும் காலம் வருவது தெளிவாக தெரிகிறது.  கிழக்கு கடலோர பகுதிகளில் காலை நேர வெப்ப நிலையில் உயர்வு பெற கூடும்.  குறிப்பாக தென் தமிழக பகுதிகளில் குளிர் காலம் முடிவுக்கு வந்து  விட்டது என கருத்தில் கொள்ளலாம். தமிழகத்தின் உட்புற பகுதிகளான வேலூர், தர்மபுரி ஆகிய பகுதிகளில் குளிரின் தாக்கம் குறையும் என எதிர் பார்க்கலாம்.