வட தமிழகத்தில் ஆலங்கட்டி மழை வாய்ப்பு

வங்க கடலில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு காற்று அழுத்த சுயற்சி மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கரை அருகே உள்ளது.

இதன் காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் அவ்வப்பொழுது ஆலங்கட்டி மழை பெய்ய கூடும். தர்மபுரி, திருப்பத்தூர் சேலம் போன்ற பகுதிகளில் கண மழை வாய்ப்பு உள்ளது. கடந்த சில தினங்களாக நடந்தது போல வெப்ப சலனம் காரணமாக உட்புற பகுதிகளில் நிலையற்ற நிலை உருவாகும், இது கடலில் இருந்து வரும் ஈர பத காற்றை மழை மேகமாக மாற்றி மழை வாய்ப்பு உருவாகும்.

Weather_map
சென்னை மற்றும் கடல் சார்ந்த வட தமிழக பகுதிகளில் கீழ் மற்றும் மேல் பகுதிகளில் நிலவும் வேறுபட்ட காற்று நிலை காரணமாக குறைவான மழை வாய்ப்பு காண படுகிறது. ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய கூடும்.