தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

தென் இந்தியாவில் கடந்த ஓரிரு தினங்களாக குறைந்து காணப்பட்ட வெப்ப நிலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. ஞாயிறு மற்றும் சனி அன்று நிலவி வந்த சற்றே மேக மூட்டமான வானிலை காரணமாக பகல் நேர வெப்ப நிலை குறைந்து காணப்பட்டது.  இன்று பொதுவாக வானிலை தெளிந்தே காணப்படும் என்பதால் வெப்ப நிலை சற்று உயர வாய்ப்பு உள்ளது.

8_2_1

தென் இந்தியாவில் பகல் நேர வெப்ப நிலை ஓரிரு டிகிரி வரை உயர கூடும்.  தென் மற்றும் உட்புற தமிழகத்தில் பகல் நேர வெப்பம் 34 -35° வரை சில இடங்களில் எட்ட கூடும்.  இதே போல் மேற்கு கடலோர பகுதிகளும் வெப்பத்தின் தாக்கத்தில் இருக்க கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மாத்திரமே பகல் நேர வெப்பம் 30°க்கும் கீழ் இருக்க வாய்ப்பு உள்ளது.

8_2_3

இரவு நேர வெப்ப நிலை தென் இந்தியாவில் நன்கு உயர துவங்கி உள்ளது.  கோடைகாலம் வருவதற்கு முன்னோடியாக தென் தமிழகத்தில் இரவு நேர வெப்ப நிலை தற்பொழுது 24°க்கும் கீழ் வருவது குறைந்து விட்டது.  இதே போல் வட தமிழகம் மற்றும் உட்புற இடங்களிலிலும் பொதுவாக இரவு நேர வெப்ப நிலை 22° அளவை எட்ட தொடங்கி உள்ளது.  படிபடியாக குளிரின் தாக்கம் முற்றிலும் குறைந்து விடும்.