வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி

இந்த ஆண்டின் முதல் காற்று அழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவுக்கும் பூமத்திய ரேகைக்கும் இடையே உருவாகி உள்ளது.  இது அடுத்த சில நாட்களில் இலங்கை கடற்கரை பகுதிக்கு நகர வாய்ப்பு உள்ளது.

ஆண்டின் இந்த பகுதியில் வானிலையில் சாதகமான நிலை நிலவுவது சற்று கடினம். மேலும் பூமத்திய ரேகைக்கு மிக அருகே இந்த புதிய காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் இந்த சலனம் பெரும் வலு பெறுவது சற்று கடினமே.

10_2

வானிலை படிவங்களும் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி வலு பெறுவதாக கணிக்கவில்லை.  அடுத்த சில தினங்களில் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி இலங்கை நோக்கி நகர்வதாக படிவங்கள் கணிக்கின்றன.  இதன் காரணமாக இலங்கைக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  அதே போல் தென் தமிழகம் மற்றும் தென் கேரளாவிலும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.  வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள போதிலும் இன்றைய நிலைப்படி பெரும் மழை பெய்யும் வாய்ப்பு குறைவே.

10_2_1

தென் இந்தியாவில் பகல் நேர வெப்பம் 33 / 34° அளவில் பெரும்பாலான பகுதிகளில் நிலவ கூடும்.   மேற்கு கடலோர பகுதி மற்றும் ஆந்திரா / தெலுங்கானா ஆகிய பகுதிகளில் பரவலாக பகல் நேர வெப்பம் 35° அளவில் அல்லது அதற்கும் மேலாக இருக்க கூடும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பகல் நேர வெப்ப நிலை 34° டிகிரியை தாண்ட கூடும். கடலோர தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று அடங்கியே இருக்கும்.