வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி வலு இழப்பு

வங்க கடலில் அந்தமான் தீவு அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி முன்பு காணப்பட்டதை விட வலு குறைந்து காணபடுகிறது.  கடந்த சில தினங்களாக நிலவி வரும் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில தினங்களில் வலு குறைந்து மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே வர கூடும்.

13_2

மேல் உள்ள வானிலை செயற்கைக்கோள் வரைபடத்தில் 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி எவ்வாறு மாறி உள்ளது என்பதை எடுத்து காட்டும். வங்க கடலில் நிலவி வரும் சாதகமற்ற சூழ்நிலை ஓர் காரணம் என்ற போதிலும், தென் துருவத்தில் இதே சமயத்தில் உருவாகிய மற்றொரு சலனம் நன்கு வலு பெற்றதும் ஓர் காரணம் என கூறலாம். இந்த இரு சலனங்களும் ஒரே ரோச்பி அலையிலிருந்து உருவாகியதே இந்த இரு இரட்டை சலனங்களில் ஒன்று மற்றொன்றின் சக்தியை குறைத்து வளர வழி வகுத்துள்ளது.

இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து வரும் பொழுது இலங்கை மற்றும் தென் தமிழகத்தில் திங்கள் முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை பகல் நேர வெப்ப நிலை சற்று அதிகமாவே நிலவி வரும்.  குறிப்பாக உட்புற பகுதிகளில் பகல் நேர வெப்பம் ஓரிரு இடங்களில் 35° வரை எட்ட கூடும்.