உட்புற தமிழகத்தில் இரவு நேர வெப்ப நிலை சற்று குறைய வாய்ப்பு

வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி சற்றே தென் மேற்காக நகர்ந்து இலங்கைக்கும் அந்தமானுக்கும் இடையே மேலும் வலுவிழந்து நிலை கொண்டுள்ளது.  இது அடுத்த ஓரிரு நாட்களில் மேலும் மேற்கு தென் மேற்காக நகர்ந்து முற்றிலும் வலுவிழந்துவிடும்.

14_2

இந்த சலனம் நகரும் திசையை பொறுத்தே தமிழகதில் மழையின் பாதிப்பு இருக்க கூடும். ஆனால் அடுத்த ஓரிரு தினங்களுக்கு இலங்கையில் மழை பெய்ய கூடும்.  அடுத்த வார மத்தியில் இந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்துவிடும்.

14_2_1இந்நிலையில் தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை உயர்ந்தே காணப்படும். நேற்று சேலத்தில் மீண்டும் பகல் நேர வெப்ப நிலை 35° அளவை எட்டியது, இன்றும் அவ்வாறு இருக்க கூடும் என எதிர்பார்க்கலாம்.

14_2_2

ஆனால் இரவு நேர வெப்ப நிலையில் சற்று மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  கடந்த சில தினங்களாக இரவு நேர வெப்ப நிலை பொதுவாக உயர்ந்து உள்ளது, இன்று அது சற்று குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மேற்கு உட்புற தமிழகத்தில் இன்று இரவு நேர வெப்ப நிலை 20°க்கும் கீழ் மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளது.  ஓரிரு இடங்களில் 17° அளவை ஒட்டி இருக்க கூடும்.