கடலோர தமிழக பகுதிகளில் இரவு நேர வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு

இலங்கைக்கு தெற்கு பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்று அழுத்த பகுதி மேலும்  வலுவிழந்து உள்ளது.  இது அடுத்த ஓரிரு நாட்களுக்குள் முற்றிலும் வலுவிழந்து விடும்.  இந்த சலனத்தின் காரணமாக இனி வரும் நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு குறைவே.

இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக இரவு நேர வெப்ப நிலையில் அதிகரிப்பு காணப்படும். குறிப்பாக கடலோர தமிழக பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இரவு நேர வெப்ப நிலை 1 – 3° வரை அதிகரித்து காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

17_2

இந்த நிலை இந்த வார இறுதி வரை நீடிக்கும் என எதிர் பார்க்கலாம். பகல் நேர வெப்ப நிலையில் பெரிய மாறுதல் இருக்க வாய்ப்பு குறைவே.  பரவலாக தமிழகத்தில் பகல் நேர வெப்ப நிலை 33° அளவில் இருக்க கூடும்.  தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மற்றும் மேற்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பகல் நேர வெப்ப நிலை 35° அளவை எட்ட கூடும்.