தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் இரவு நேர வெப்ப நிலை சற்றே உயர்ந்து காணப்பட்டது.  பல இடங்களில் குறைந்த பட்ச வெப்ப நிலை 25 டிகிரிக்கு மேல் நிலவி வந்தது.  உட்புற பகுதிகளிலும் சராசரி அளவை காட்டிலும் ஓரிரு டிகிரி அதிகரித்தே காணப்பட்டது.

இந்நிலையில் பகல் நேர வெப்ப நிலையிலும் சற்று அதிகரிப்பு இருக்கும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. குறிப்பாக மேற்கு உட்புற பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை 35 டிகிரி அளவை எட்ட கூடும்.  கரூர், சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் இந்த வெப்ப நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது.

19_2

வங்க கடலில் நிலவி வந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது முற்றிலும் வலு இழந்து காற்று அழுத்த தாழ்வு நிலையாக இலங்கை அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.