ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வெப்ப தாக்கம்

நேற்று ஒடிஷா தலைநகர் புபநேஸ்வரில் பகல் நேர வெப்ப நிலை 40.9 டிகிரி அளவை தொட்டது.  இது இந்த ஆண்டில் இந்தியாவில் பதிவாகிய முதல் 40 டிகிரி வெப்ப நிலை ஆகும்.  இதே போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ராமகுண்டம், தூணி ஆகிய இடங்களில் பகல் நேர வெப்ப நிலை 38 டிகிரிக்கும் மேல் பதிவாகியது. இந்த வெப்ப அலை தாக்கம் மேலும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

21_1

தமிழகத்தில் நேற்று சேலத்தில் 36.5 டிகிரி வெப்ப நிலை பதிவாகியது.  இது இந்த ஆண்டில் தமிழகத்தில் முதல் முறையாக 36 டிகிரி பதிவாகிய வெப்ப நிலை ஆகும்.  இதே போல் தருமபுரி மற்றும் திருச்சியில் இந்த ஆண்டில் முதல் முறையாக 35 டிகிரி அளவை வெப்ப நிலை தாண்டி உள்ளது.

இன்றும் தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை அதிகமாவே காணப்படும்.  குறிப்பாக வட தமிழகத்தில் ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை 36 டிகிரி அளவை எட்டக்கூடும்.  கடலோர பகுதிகளில் சற்றே குறைவாக வெப்ப நிலை நிலவ வைப்பு உள்ளது.