தமிழகத்தில் பகல் நேர வெப்ப நிலை சற்று குறைய கூடும்

நேற்று தமிழகத்தில் பகல் நேர வெப்பம் வெகுவாக உயர்ந்து காணப்பட்டது. சேலத்தில் 38 டிகிரியை எட்டிய வெப்பம் தமிழகத்தின் பல இடங்களில் 36 டிகிரியை தொட்டது.  இதே போல் ஆந்திரா மற்றும் தெலுங்காணா பகுதிகளில் பல இடங்களில் பகல்  நேர  வெப்ப நிலை 39 டிகிரி அளவை எட்டியது.

கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் நேற்று 40 டிகிரி அளவை எட்டியது. இது இந்த ஆண்டு இந்தியாவில் 40 டிகிரியை எட்டிய இரண்டவது நகரம்.  சில தினங்களுக்கு முன் புபனேஸ்வர் 40 டிகிரியை எட்டியது.

23_2

இன்று தமிழகத்தில் பகல் நேர வெப்ப நிலை சற்று குறைய வாய்ப்பு  உள்ளது. குறிப்பாக உட்புற பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பரவலாக பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 34 / 35 டிகிரியை ஒட்டி இருக்க கூடும் என வானிலை படிவங்கள் எதிர்பார்கின்றன. சென்னையிலும் பகல் நேர வெப்பம் சற்று மிதமாக இருக்க கூடும். இரவு நேர வெப்ப நிலையில் சற்று அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.