அரபிக்கடல் அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு

அரபிக்கடல் அருகே குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு உள்ளது.

தென் மேற்கு பருவ காற்று கேரளத்தில் வந்து சேராத நிலையில் அடுத்த ஓரிரு தினங்களில் மாலத்தீவு ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் உருவாக கூடும். இது வலு பெற்று வடக்கு நோக்கி நகர கூடும்.  இதன் காரணமாக கேரளத்தை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் சற்று பலத்த மழை பெய்ய கூடும்.