தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் அடுத்த ஓரிரு தினங்களுக்கு தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு  உருவாகி உள்ளது.

பூமத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் தரை நிலை கீழை காற்று தாழியின் காரணமாகவும் லட்சத்தீவு பக்தியில் இருக்கும் மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாகவும் இந்த மழைக்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

26_2

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும் சற்றே பலத்து நிலவி வரும் கீழை காற்று காரணமாக தமிழகத்தில் இன்று பொதுவாக பகல் நேர வெப்ப நிலை குறைந்து காணப்படும்.  கடலோர பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை 30 டிகிரி அளவை ஒட்டியே இருக்கும்.