தமிழகத்தில் பகல் நேர வெப்ப நிலை சற்று மிதமாக இருக்க கூடும்

நேற்று தமிழகத்தில் பரவலாக பகல் நேர வெப்ப நிலை மிதமாக நிலவியது.  பல இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலை 33 / 34 டிகிரி அளவே இருந்தது. மதுரையில் மட்டும் 35 டிகிரியை தண்டி இருந்தது.  பகல் நேர வெப்ப நிலை சற்றே மிதமாக நிலவிய போதும் இரவில் வெப்ப நிலை மேக மூட்டம் காரணமாக உயர்ந்து காணப்பட்டது.

29_1

இந்நிலையில் தென் துருவத்தில் இது வரை இருந்து வந்த வெப்ப மண்டல காற்று குவியல் பகுதி சூரியனை பின் தொடர்ந்து வட துருவத்திற்கு மீண்டும் வர தயாராகி வருகிறது.  இது வட துருவத்தில் கோடை காலம் துவங்கும் தருணம் அருகில் உள்ளது என்பதை உணர்த்துகிறது.  இந்த வெப்ப மண்டல காற்று குவியல் பகுதி வடக்கு நோக்கி நகரும் பொழுது இந்திய துணை கண்டத்திற்கு பருவ மழைக்காலம் தொடங்க ஏதுவாகும்.

29_2

நேற்று போல் இன்றும் பகல் நேர வெப்ப நிலை தமிழகத்தில் சற்றே மிதமாக நிலவ கூடும்.  பரவலாக அதிக பட்ச பகல் நேர வெப்ப நிலை 34 டிகிரி அளவில் இருக்க கூடும்.  உட்புற பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப நிலை 35 டிகிரி அளவை எட்ட கூடும்.  கடலோர பகுதிகளில் கீழை காற்று காரணமாக வெப்ப நிலை சற்று குறைந்து இருக்க கூடும்.