மேற்கு இந்தியாவில் ஆலங்கட்டி மழை வாய்ப்பு

காற்றின் நிலையற்ற தன்மை மற்றும் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக மகாராஷ்டிராவில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி மழையும் பதிவாகியது.  இதே போல் தெலுங்கானாவில் சில இடங்களில் வெய்யிலின் சூட்டை தணிக்கும் விதமாக நேற்று முன் தினம் நல்ல மழை பதிவாகியது.

2-3

இன்றும் இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக தென் மகாராஷ்டிராவில் சோலாபூர் / லதூர் ஆகிய பகுதிகளில் மற்றும் அதனை சார்ந்த தெலுங்கானா பகுதிகளில் மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.  மேலும் குஜராத் மாநிலத்தில் பகல் நேர வெப்ப நிலை சற்று அதிகமாகவே இருக்க கூடும்.

2_3_1

இதே போல் தென் இந்தியாவிலும் மேற்கு கடலோர பகுதிகளில் வெப்ப நிலை சற்று உயர்ந்து இருக்கும்.  பொதுவாக தென் இந்தியாவில் மிதமான வெப்ப நிலை காணப்படும்.  கிழக்கு கடலோர பகுதிகளில் சற்று குறைந்து இருக்கும் பகல் நேர வெப்ப நிலை உட்புற பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் நன்கு அமைய கூடும்.