தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நீடிப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நீடித்து வருகிறது.  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்த போதிலும் பொதுவாக மாநிலத்தில் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது.  இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு மாறுதல் எதுவும் இருப்பதாக வானிலை படிவங்கள் காட்டவில்லை.

இந்நிலையில் இந்த வார இறுதி வரை பகல் நேர வெப்ப நிலை சற்று மிதமாகவே நீடிக்கும் என எதிர்பார்க்கலாம். கடலோர பகுதிகளில் கீழை காற்று காரணமாக சற்று மிதப்படும் வெப்ப நிலை உட்புற பகுதிகளில் ஓரிரு டிகிரி உயர்ந்து காணப்படும். எனினும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை நீடிக்க வாய்ப்பு சற்று குறைவே.

3_3

நேற்று நமது பதிப்பில் கூறியது போல் குஜராத் மாநிலத்தில் சுரேந்திரா நகரில் பகல் நேர வெப்ப நிலை 40 டிகிரி பதிவாகியது. புபனேஸ்வர், அனந்தபூர், குல்பர்கா மற்றும் நிஜாமாபாத் ஆகிய இடங்களை தொடர்ந்து சுரேந்திரா நகர் இந்த ஆண்டில் 40 டிகிரியை எட்டிய ஐந்தாவது இடம் ஆகும். குஜராத் மாநிலத்தில் நேற்று பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

3_3_1

இன்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உட்புற பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக புனே, கோலாப்பூர் மற்றும் அஹ்மத்நகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி மழை வாய்ப்பு உள்ளது.