தமிழ்நாட்டில் சாதாரண வானிலை, மத்திய இந்திய பகுதிகளில் ஆலங்கட்டி மழை

கடந்த சில தினங்களாக தென் இந்தியாவில் பரவலாக வானிலை சாதாரண நிலையாக இருந்து வருகிறது.  மேற்கு கடலோர பகுதிகள், தெலுங்கானா மற்றும் உட்புற ஆந்திராவில் சற்று உயர்ந்து காணப்படும் பகல் நேர வெப்ப நிலை மற்ற பகுதிகளில் மிதமாக நிலவி வருகிறது. மார்ச் மாதம் முதல் பகுதியில் இவ்வாறு வெப்ப நிலை நிலவி வருவதில் ஆச்சிர்யம் இல்லை.

இந்த நிலை அடுத்த சில தினங்களுக்கு நீடிக்க கூடும்.  மார்ச் மாதம் 10ஆம் தேதி அளவில் பகல் நேர வெப்ப நிலையில் சற்று உயர்வு இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. அது வரை இந்த வானிலை நிலவரத்தில் அதிக மாற்றம் இருக்காது என கொள்ளலாம். தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கீழை காற்று காரணமாக பகல் நேர வெப்ப நிலை மிதப்பட்டு வருகிறது. உட்புற பகுதிகளில் சற்று உயர்ந்து காணப்படும் வெப்ப நிலை 35/36 டிகிரி அளவில் நிலவ கூடும்.

6_3

இந்நிலையில் மத்திய இந்திய பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  காற்று குவிதல் காரணமாக மற்றும் வெப்ப உந்துதல் காரணமாக நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக இங்கு மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது.