கிழக்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் வெப்ப அலை வாய்ப்பு

கடந்த மாதத்தின் பிற்பகுதியில் கிழக்கு இந்திய பகுதிகளில் சில நாட்களுக்கு வெப்ப அலை தாக்கம் நிலவியது.  இந்த சமயத்தில் தான் புபநேஸ்வரில் 40.9 டிகிரி பதிவு ஆகியது.  இந்த ஆண்டின் முதல் 40 டிகிரி இதுவே ஆகும்.

இதே போல் இந்த வாரத்தின் பிற்பகுதியில் வியாழன் முதல் மீண்டும் ஓர் வெப்ப அலை தாக்கத்திற்கு வாய்ப்பு உள்ளது.  இந்த வெப்ப அலை ஓடிஸா, சத்திஸ்கர், மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அதிகமாக இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன

8_3

10ஆம் தேதி முதல் துவங்க கூடிய இந்த வெப்ப அலை முதலில் மத்திய இந்திய பகுதிகளில் பாதிப்பு இருக்க கூடும்.  மேற்குறிய மாநிலங்களை தவிர மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் வட கடலோர ஆந்திராவின் சில பகுதிகளில் வெப்ப நிலை 4 முதல் 6 டிகிரி வரை அதிகரித்து நிலவ கூடும்.  பகல் நேர வெப்ப நிலை இந்த பகுதிகளில் 40 டிகிரி அளவை ஒட்டியும் ஒரு சில இடங்களில் 40 டிகிரி அளவை தாண்டியும் இருக்க கூடும்.

இதே போல் தென் இந்தியாவிலும் பகல் நேர வெப்ப நிலையில் சற்று உயர்வு காணப்படுகிறது, இது பற்றி விரிவாக நாளை பதிப்பில் நாம் காண்போம்.