தமிழகத்தில் பகல் நேர வெப்பம் அதிகரிக்க துவங்கும்

இந்த ஆண்டில் இது வரை இந்தியாவில் அனேக இடங்களில் ஒரு சில சமயங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது  நேற்று கேரளாவின் கண்ணூரில் வரலாற்றில் அதிகமாக 39 டிகிரி பதிவாகியது. இருந்த போதும் தமிழகத்தில் பொதுவாக வெப்பத்தின் தாக்கம் குறைந்தே நிலவி வந்தது.  இந்த நிலை இன்று முதல் மாற கூடும்.

9_3

இது வரை தமிழகத்தில் உட்புற பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்பம் 34 / 35 டிகிரி அளவில் நிலவி வந்தது. சில நாட்கள் ஓரிரு இடங்கள் 36 டிகிரி அளவை தொட்டது.   இன்று முதல் பகல் நேர வெப்ப நிலை உயர துவங்க வாய்ப்பு உள்ளது.  இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 35 டிகிரி அளவை தாண்ட கூடும்.  நாளை முதல் உட்புற பகுதிகளில் பரவலாக வெப்ப நிலை உயர்ந்து காணப்படும். ஒரு சில இடங்களில் இந்த வார இறுதியில் வெப்பம் 38 / 39 டிகிரி அளவை எட்ட வாய்ப்பு உள்ளது.

கடலோர பகுதிகளில் கீழை காற்று காரணமாக வெப்ப நிலை சற்று மிதமாக இருக்க கூடும்.