தென் இந்தியாவில் வெப்ப தாக்கம், தமிழகத்திலும் உயர கூடும்

நேற்று ஆந்திரா மற்றும் தெலுங்கனாவின் பல பகுதிகளில் அதிக பட்ச வெப்ப நிலை 38 டிகிரியை தாண்டி இருந்தது.  இதே போல் தமிழகத்தில் கரூரில் அதிக பட்சமாக 37.4 டிகிரி பதிவாகியது.  தமிழகத்தின் பல இடங்களில் நேற்று 36 டிகிரியை தாண்டி இருந்தது.  இந்த வெப்ப தாக்கம் அடுத்த ஓரிரு நாட்களுக்கு நீடிக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

10_3

இந்நிலையில் இந்த வார இறுதி வரை தமிழகத்தில் பரவலாக பகல் நேர வெப்ப நிலை 2 – 4 டிகிரி வரை அதிகமாக இருக்க கூடும் என வானிலை படிவங்கள் எதிர்பார்க்கின்றன. உட்புற பகுதிகளில் பொதுவாக அதிகபட்ச வெப்ப நிலை தமிழகத்தில் 36 டிகிரியை ஒட்டி மற்றும் அதற்கு மேலாக நிலவ கூடும்.  ஒரு சில இடங்களில் இந்த வார இறுதிக்குள் உயர்ந்த பட்ச வெப்ப நிலை 38 / 39 டிகிரி வரை எட்ட வாய்ப்பு உள்ளது. கடலோர பகுதிகளில் கீழை காற்று காரணமாக சற்றே மிதமாக இருக்க கூடும் ஆனாலும் சென்னை போன்ற பகுதிகளில் அதிக பட்ச வெப்ப நிலை 34 டிகிரி அளவில் நிலவ கூடும்.