சென்னை மழை பற்றிய ஓர் ஆய்வு

[1] 2015 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 தேதி அன்றுதான் வடகிழக்கு மழை ஆரம்பம் ஆனது. அக்டோபர் மாதம் இயல்பாய் பெற வேண்டிய மழையை விட குறைந்த அளவிலே தமிழகப்பகுதியில் மழை இருந்தது.
[2] அதே ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து ஏறக்குறைய 10 நாட்களுக்கு ஒரு முறை பெரும் பேய்மழை இருந்தது. (24 மணி நேர மழை அளவு 20 செ.மீ கூடுதலானது)
[3] இம்மழை பெரும்பாலும் (1) திருவள்ளூர் (2) சென்னை (3) காஞ்சிபுரம் (4) விழுப்புரம் (5) கடலூர் மாவட்டங்களை ஒட்டியே  இருந்தது,
[4] நவம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அதிதீவிர அடைமழை, ஒரு சில மணி நேரத்தில் பெய்ததன் காரணமாய் ஏற்பட்டது. மழை அளவுகள் 45 செ. மீ ஐ மிஞ்சின. கடலூர் வெள்ளக்காடானது.
[5] இம்மழை  காலத்தில் இடி மேக மழை பொழிவு இல்லாது  இருந்தது.   [அதாவது இடியுடன் கூடிய மழை இல்லை]
[6] ஈரமான வெப்பக்காற்று (கடனீர் வெப்பத்தால் ஆவியானது) கிழக்கு- மேற்கு என்று கிடக்கையாய் பரவி வளி மண்டலம் மேல் ஊர்ந்தது. இதை “அட்வேக்சன்” என்பர். நீளமாய் / கிடக்கையாய்  மேல் எழுந்து ஊர்தல் எனலாம். புவியின் நில நடுக்கோட்டு_ வெப்ப மண்டலப்பகுதில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாது என்போரும் உளர்.   என்றாலும் “டாப்ளர் ராடார்” இந்த மேல் ஊர்வதைக்  காட்டியது.
(7) நவம்பர் 23 இல், 100 கிலோ மீட்டர் நீளத்திற்கு, அன்றைய தினம் வளி மண்டலத்தில ஈர கடல்   காற்று வலன் சுழியாய் மேல் ஊர்ந்து சென்னை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அடைமழையை தந்தது.
[8] அதே போல் டிசம்பர் முதல் நாள் அன்று ஊழிமழை [1] திருவள்ளூர் [2] சென்னை [3] காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்தது. இம்ம்முறை தென் வடலாக ஈரக்காற்று ஊர்ந்தது. அதன் செறிவு (அ) பழந்தண்டலம் பகுதியில் மணிக்கு 58 மில்லி மீட்டர் அளவில் காலை 1130-1230 இருந்தது.
[9] அதே போல் மாலை 1730-1830 மணியில் செறிவு செங்கல்பட்டு தாண்டி, அங்கு இருக்கும் குன்றுகள் மீது இருந்தது. அங்கும் மணிக்கு 50 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை தீவிரம் இருந்தது.
[10] செங்கல்பட்டில் தான் இம்மழை காலத்தில் 225 செ. மீ அளவுக்கு மழை இருந்தது. ஆனாலும் அங்கு பெரிய அளவில் வெள்ளம் இல்லை. அதற்கு காரணம் அகன்ற பாலாறு ஆகும்.
[11] அடையார் குறுகிய அகலம் கொண்ட ஆறு. எனவே அடையாற்றினை பாலாற்றோடு இணைக்க வேண்டும். இது எதிர் காலத்திற்கு நன்மை பயக்கும்.

Capture