தமிழக உட்புற பகுதிகளுக்கு மழை வாய்ப்பு

அரபிக்கடலில் நேற்று அஷோபா புயல் உருவாகி உள்ளது. இது தற்பொழுது மும்பைக்கு சற்று மேற்கே மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பாரசீக வளைகுடா நோக்கி செல்ல கூடும்.

கடந்த சில தினங்களாக இந்த புயல் சின்னம் காரணமாக தமிழக உட்புற பகுதிகளுக்கு மழை வாய்ப்பு சற்று குறைந்து காணப்பட்டது. இன்று முதல் வெப்ப சலனம் மூலம் உருவாகும் மழை வாய்ப்பு புயல் சின்னத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுகிறது. இன்று வட தமிழகம் மற்றும் அத்தனை ஒட்டிய தென் ஆந்திர உட்புற பகுதிகளில் மழை வாய்ப்பு உருவாகி உள்ளது.

Weather_map

வேலூர், அரக்கோணம், திருப்பதி போன்ற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை இன்று பெய்ய கூடும்.

தென் தமிழகத்தில் மழை சற்று குறைந்தே காண படுகிறது. இது தென் மேற்கு பருவ காற்று சற்று பலம் குறைந்து இருப்பதாலும், அரபிக்கடலில் உள்ள புயல் காரணமாகவும் மழை வாய்ப்பு குறைந்து உள்ளது.  மேலும் 3 / 4 நாட்களுக்கு இந்நிலை நீடிக்க கூடும்.