கிழக்கு கடலோர பகுதிகளில் மீண்டும் வெப்ப தாக்கம்

கடந்த சில தினங்களாக சற்றே குறைந்து காணப்பட்ட பகல் நேர வெப்ப நிலை மீண்டும் உயர வைப்பு இருப்பதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இந்த்த வார இறுதியில் வெப்ப அலை மீண்டும் வீச கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் மேற்கத்திய கலக்கம் காரணமாக பொதுவாக பல இடங்களில் மழை பெய்தது மேலும் வெப்ப நிலை சற்றே குறைந்தும் காணப்பட்டது. அந்த நிலை மார்ச் 19 முதல் மாற துவங்கும்.  குறிப்பாக கிழக்கு கடலோர பகுதிகளில் வெப்ப நிலை சற்று உயர்ந்து காணப்படும்.  தென் ஆந்திராவில் இருந்து ஓடிஸா / வங்காளம் வரை பகல் நேர வெப்ப நிலை 40 டிகிரியை தாண்ட கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

17_3

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய விதர்பா பகுதிகள், ஓடிஸா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் இந்த வெப்ப அலை தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த பகுதிகளில் மார்ச் 19 முதல் 21 வரை அனேக இடங்களில் பகல் நேர வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.

தமிழகத்திலும் வட மற்றும் மதிய உட்புற பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை 40 டிகிரி வரை எட்ட வாய்ப்பு உள்ளது.  சென்னையில் இந்த நேரத்தில் கீழை காற்றின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் சற்று மிதப்படும் என எதிர்பார்த்த போதிலும் வானிலை படிவங்கள் 3 / 4 டிகிரி வரை வெப்ப நிலை சராசரி அளவை காட்டிலும் அதிகரித்து இருக்க கூடும் என கனிகின்றன. வெள்ளி அன்று தமிழகத்தில் இந்த வெப்ப தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என அறிந்து கொள்ளலாம்.