தென் இந்தியாவில் வெப்ப அலை மேலும் தொடரும்

கடந்த இரு தினங்களாக வெப்ப அலை வாட்டி வதைக்க துவங்கி உள்ளது.  குறிப்பாக கிழக்கு கடலோர பகுதிகளில் இந்த வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.  இன்று சென்னை முதல் முறையாக 36 டிகிரி அளவை தொட்டது.  உட்புற பகுதிகளில் கரூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் இந்த ஆண்டில் முதல் முறையாக 40 டிகிரி அளவை வெப்ப அளவு தாண்டியது. இதே போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் 40 டிகிரி அளவை தாண்டியே நிலவி வருகிறது.

இந்த நிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. செவ்வாய் அல்லது புதன் அன்று வெப்ப நிலை அதிகபட்சமாக நிலவ கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

21_3_`

நாளையும் வெப்ப நிலை அதிகரித்தே இருக்க கூடும். உட்புற ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் 40 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடிய வெப்ப நிலை சில பகுதிகளில் 41 / 42 டிகிரி அளவை எட்ட கூடும்.

இதே போல் தமிழகத்தின் உட்புற பகுதிகளில் அதிகரித்தே இருக்க கூடிய பகல் நேர வெப்பம் அனேக இடங்களில் 37 / 38 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும் சில இடங்களில் மீண்டும் 39 / 40 டிகிரி அளவை எட்ட கூடும்.

சென்னையில் பகல் நேர அதிகபட்ச வெப்பம் 36 டிகிரி அளவில் நிலவ கூடும். காற்றில் ஈரபதம் குறைந்து இருக்க வாய்ப்பு இருப்பதால் பகல் பொழுதில் மிகவும் சங்கடமான தட்பவெப்ப நிலை நீடிக்க கூடும்.