வட தமிழக பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம்

கடந்த சில தினங்களாக தென் இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப நிலை அதிகரித்தே காணப்பட்டுள்ளது. இரு தினங்களாக சேலம் மற்றும் கரூரில் பகல் நேர வெப்ப நிலை 40 டிகிரி பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்ப நிலை 37 டிகிரி அளவை ஒட்டி பதிவாகி வருகிறது.

23_3

இந்நிலையில் இன்று வானிலை படிவங்கள் வட தமிழகத்தில் பல பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை 4 டிகிரி அளவிற்கு சராசரி வெப்ப நிலையை விட அதிகரித்து காணப்படும் என கணிக்கின்றன. குறிப்பாக உட்புற பகுதிகளில் பல இடங்களில் இன்று பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி அளவை தாண்ட கூடும். வேலூர் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இந்த வெப்பத்தின் தாக்கம் இருக்க கூடும். இதே போல் சென்னை மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளிலும் கடந்த சில தினங்களை விட வெப்ப நிலை அதிகரித்து காணப்படும்.

கடந்த இரு தினங்களாக சென்னையில் பகல் நேர வெப்ப நிலை 36 டிகிரி பதிவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் அதிகபட்ச வெப்ப நிலையாக 37.7 டிகிரி 2011ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. இன்று சென்னையில் இந்த வெப்ப நிலையை எட்ட கூடிய வாய்ப்பு உள்ளது