தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் – வேலூரில் 41.1 பதிவு

நேற்று நமது வலை பதிப்பில் கூறியது போல் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.  வேலூரில் நேற்று அதிகபட்ச வெப்பமாக 41.1 டிகிரி பதிவாகியது.  இது கடந்த 10 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் பதிவாகிய அதிக பட்ச வெப்ப நிலை ஆகும்.  இதே போல் திருச்சி மற்றும் மதுரையிலும் நேற்று கடந்த பத்து ஆண்டுகளில் அதிக பட்ச வெப்பநிலை பதிவாகியது.

இன்றும் தென் இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படும்.  குறிப்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அனேக இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலை 40 டிகிரி அளவை ஒட்டி இருக்கும்.

23_3

இன்றும் வட தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.  வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சில இடங்களில் அதிக பட்ச வெப்பம் 40 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.  இதே போல் மேற்கு தமிழகத்தின் சில பகுதிகளிலும் பகல் நேர வெப்பம் சராசரி அளவை விட சற்று உயர்ந்து இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன