கிழக்கத்திய அலை காரணமாக கடலோர பகுதிகளில் வெப்பம் குறைய வாய்ப்பு

கடந்த சில தினங்களாக தென் இந்தியாவை வாட்டி எடுத்த வெப்ப அலை நேற்று முதல் சற்று குறைய துவங்கி உள்ளது.  நேற்று பல நாட்களுக்கு பின் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் பகல் நேர அதிக பட்ச வெப்ப நிலை 40 டிகிரி அளவை எட்ட வில்லை.

இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வரவிருக்கும் கிழக்கத்திய அலை காரணமாக கடலோர தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படும்.   நேற்று முதல் தரைக்காற்று கிழக்கிலிருந்து சற்று பலம் பெற்று இருப்பதால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவது குறைந்து உள்ளது.  இதே நிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்க கூடும் என எதிர்பார்க்கலாம்.

25_3_1

இந்த கிழக்கத்திய அலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ள போதிலும் எந்த அளவுக்கு மழை இருக்க கூடும் என்பதற்கு ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும்.  தற்பொழுது நிலவும் வானிலை படிவங்களின் கூற்று படி அடுத்த வாரம் முதல் பகுதியில் தென் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய கூடும்.

25_3

அடுத்த சில தினங்களுக்கு மத்திய இந்திய மற்றும் மேற்கு கடலோர இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று உயர்ந்து காணப்படும்.  குறிப்பாக குஜராத் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது.