தென் கடலோர தமிழக பகுதிகளில் மழை வாய்ப்பு

இன்று பரவலாக தமிழகத்தில் பகல் நேர வெப்ப நிலை சற்று குறைத்து காணப்பட்டது. மதுரையில் அதிகபட்சமாக 38.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.  மூன்றாவது நாளாக தமிழகத்தின் எந்த ஓர் இடத்திலும் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி அளவை எட்டவில்லை. சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலையாக 33.5 டிகிரி அளவே பதிவாகியது.

28_3_1

கிழக்கத்திய அலை காரணமாக இன்று இலங்கையில் சில பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. காலி அருகே உள்ள பாட்டுவங்களா பகுதியில் அதிகபட்ச மழையாக 25 மிமீ மழை பதிவாகியுள்ளது.

28_3

இந்நிலையில் நாளை இரவு முதல் தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு கிழக்கத்திய அலை காரணமாக உருவாகி உள்ளது. அடுத்த ஓரிரு தினங்களில் தென் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நாளை இரவு இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி ஆகிய இடைப்பட்ட கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  வடகிழக்கு பருவமழை காலம் போல் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் மழை வாய்ப்பு அதிகமாக இருக்க கூடும்.

ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவ கூடும்.  கிழக்கிலிருந்து வரும் காற்று காரணமாக வெப்ப நிலை சற்று குறைந்தே காணப்படும். கடலோர பகுதிகளில் சற்று மேகமூட்டமாக இருக்க கூடும் என்பதால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படும்.