தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மழை தொடரக்கூடும்

இன்று தென் தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  இலங்கையில் பரவலாக மழை பெய்து வருகிறது, ஒரு சில இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது.

28_3

இந்நிலையில் நாளையும் தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  நேற்று நமது பதிவில் கூறியது போல் இந்த கிழக்கத்திய அலை கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து வருகிறது இதன் காரணமாக நாளை கேரளா பகுதிகளிலும் மழை பெய்ய கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  இரு மாநிலங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.  தமிழகத்தை பொறுத்தவரை திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் மழை பெய்ய கூடும்.

அடுத்த சில தினங்களுக்கு கேரளாவில் ஒரு சில இடங்களில் இந்த மழை நீடிக்க கூடும்.  தமிழகத்தை பொறுத்தவரை நாளை முதல் மழை வாய்ப்பு குறைய துவங்கும்.  தமிழகத்தின் பிற இடங்களில் பரவலாக வறண்ட வானிலை நிலவும் சில இடங்களில் வானம் மேக மூட்டமாக இருக்க கூடும் இதன் காரணமாக இரவு நேர குறைந்த பட்ச வெப்ப நிலை சற்று உயர்ந்து காணப்படும்