முனைவர் ரமணன் வானிலை பணியிலிருந்து இன்று ஒய்வு

கடந்த பல வருடங்களாக சென்னை இந்திய வானிலை துறையின் முகமாக விளங்கிய முனைவர் ரமணன் இன்று பணி ஒய்வு பெறுகிறார்.  ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலில் இந்திய வானிலை துறையில் சேர்ந்த திரு ரமணன் 36 வருடங்கள் பணியாற்றி உள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக வடகிழக்கு பருவ மழை காலத்தில் மிக அதிகம் நேசிக்கபட்டவரும் இவரே, மிக அதிகம் விமர்சிக்கபட்டவரும் இவரே.  இந்த நூற்றாண்டில் தமிழகத்தை தாக்கிய மிக தீவிர புயல் தானே. இந்த புயலின் பொழுது துல்லியமாக அதன் பாதையை கணித்து சாமானியர்கள் மற்றும் மீனவர்கள் புரிந்து கொள்ளும் படி அதன் வீரியத்தை பற்றி எடுத்துரைத்து உயிர் சேதங்கள் குறைந்து இருந்ததற்கு இவரும் ஓர் முக்கிய காரணம்.

வானிலை மட்டும் அல்லது தமிழிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் வானிலை நிகழுவகளை நடைமுறை தமிழில் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்கும் விதம் இவரது தனிச்சிறப்பு.  தின நாளிதழ்கள் வெப்பசலனம்,  மேலடுக்கு காற்று சுழற்சி போன்ற வானிலை சொற்கள் பிரபலம் அடைய பெரும் பங்கு ஆற்றியவர். இவரது வானிலை மற்றும் தமிழ் ஆர்வம் இரண்டுமே இந்த படகாட்சியில் பார்க்கலாம்.

சென்னையில் ஓர் மழைகாலம் தமிழ் வானிலை வலைப்பதிவு உருவாக மிக முக்கிய உந்துதல் திரு ரமணன்.  சென்னையின் மழை மனிதரே தங்களது ஓய்வு அடுத்தகட்ட ஓட்டத்திற்கு இளைப்பாறலாக இருக்கட்டும்…. !!  என வாழ்த்துகிறோம்