தமிழகத்தில் மீண்டும் வெப்பநிலை உயரக்கூடும்

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக பகல் நேர வெப்ப நிலை சற்று குறைந்தே காணப்பட்டது.  குறிப்பாக கடலோர பகுதிகளில் கிழக்கிலிருந்து வரும் காற்று காரணமாக பகல் நேர வெப்ப நிலை மிதப்பட்டு நிலவி வந்தது.

இந்நிலையில் அடுத்த சில தினங்களில் தமிழகத்தில் மீண்டும் வெப்ப நிலை உயரக்கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  சென்னை போன்ற கடலோர பகுதிகளில் இந்த வார இறுதியை ஒட்டி அதிகபட்ச வெப்பம் சராசரி அளவை விட 2 டிகிரி அளவிற்கு அதிகமாக நிலவ கூடும் என வானிலை படிவங்கள் எதிர்பார்கின்றன.

1_4

இதே போல் தமிழகத்தின் உட்புற பகுதிகளிலும் பகல் நேர வெப்ப நிலை ஓரிரு டிகிரி அதிகரிக்கக்கூடும்.  கடந்த சில தினங்களாக தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 38 டிகிரி அளவை ஒட்டி நிலவி வந்தது இது மீண்டும் 39-40 டிகிரி அளவை இந்த வார இறுதியில் எட்ட வாய்ப்பு உள்ளது.

குமரி கடல் அருகே நிலவி வரும் மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக கேரளா மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய கூடும்.  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இந்த மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.