மத்திய இந்திய பகுதிகளில் அசாதாரணமான வெப்ப நிலை

கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் அடுத்த ஓரிரு மாதங்கள் பரவலாக வெப்ப நிலை அதிகமாக நிலவ கூடும்.  இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் பரவலான வெப்பத்தின் தாக்கம் இன்று நிலவ கூடும்.  வட இந்தியாவின் சில பகுதிகள், வடகிழ்ககு இந்தியாவின் சில பகுதிகள் தவிர இந்தியாவின் அணைத்து உட்புற பகுதிகளிலும் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

2_4_2

குறிப்பாக தெலுங்கானா, மகாராஷ்டிரா, சத்திஸ்கர் மற்றும் ஓடிஷாவின் சில பகுதிகளில் வெப்ப நிலை மிகவும் அதிகரித்து காணப்படும்.  அதே போல் ஆந்திராவின் உட்புற பகுதிகளில் சில இடங்களில் பகல் நேர வெப்பம் 42  டிகிரி வரை எட்ட வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களை விட இரண்டு டிகிரி வரை உயர்ந்து காணப்படும்.  உட்புற பகுதிகளில் ஓரிரு இடங்கள் மீண்டும் 40 டிகிரி அளவை பதிவு செய்ய கூடும்.  கடலோர பகுதிகளிலும் வெப்பம் சற்று உயர்ந்து நிலவும் சென்னை போன்ற இடங்களில் அதிகபட்ச வெப்பம் 36 டிகிரி வரை தொடக்கூடும்.  சென்னையின் மேற்கு புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக  இருக்க கூடும்.