தென் மேற்கு பருவ மழை இது வரை ஒரு தொகுப்பு

இந்த வருட தென் மேற்கு பருவ மழை சற்று தாமதமாக துவங்கி இருந்த போதிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் சராசரி அளவை காட்டிலும் அதிகமாக பொழிந்து உள்ளது. தமிழகத்தில் 10.6.2015 வரை 25.8 மிமி அளவு மழை பொழிந்து உள்ளது, இதுசராசரி அளவைக் காட்டிலும் 21% அதிகமாகும்.  சற்று நாம் கூர்மையாக மழை நிலவரத்தை ஆய்வு செய்வோம்.

இந்த தென் மேற்கு பருவ காலத்தை பொருத்த வரை திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, திருப்புர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் சராசரி அளவை விட இரு மடங்கிருக்கும் மேல் மழை பார்த்திருக்கிறது. இதில் தூத்துக்குடி தவிர மற்ற அனைத்து மாவட்டங்களும் உட்புற பகுதிகள் ஆகும். பெரம்பலுர் மட்டுமே உட்புற மாவட்டங்களில் அளவுக்கும் குறைவாக மழை பொழிந்த இடமாகும்.

இதே போல் நாம் சராசரி அளவை விடகுறைவாக மழை பொழிந்துள்ள மாவட்டங்கள் வரிசை பார்த்தோம் என்றால் கடல் சார்ந்த அனைத்து மாவட்டங்களுள் இதில் இடம் பெறுகிறது.  மிக குறைந்த பட்சமாக புதுச்சேரியில் ஜூன் 10 வரை மழை இல்லவே இல்லை. Presentation1