தமிழகத்தில் இன்றும் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும்

நேற்று தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை சற்றே உயர்ந்து காணப்பட்டது.  கரூர், சேலம் மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் 39 டிகிரிக்கும் அதிகமாக பகல் நேர அதிகபட்ச வெப்பம் பதிவாகியது.  இதே தவிர 5 இடங்கள் 38 டிகிரி அளவை எட்டியது.

இந்நிலையில் நேற்று இந்தியாவின் மத்திய பகுதிகளில் வெப்ப அலை வீசியது இந்த ஆண்டில் முதல் முறையாக ஒரே நாளில் 20 இடங்களில் பகல் நேர வெப்ப நிலை 42 டிகிரி அளவை தாண்டி பதிவாகியது.  இதே போல் அகோலா, கார்கோனே, ஒஷங்காபாத், நிசாமாபாத், ஜான்சி, சந்திராபூர் ஆகிய இடங்களில் 43 டிகிரிக்கும் மேல் பதிவாகியது.  கோடைகாலம் வருவதற்கு அறிகுறியாக வெப்பநிலை உயர துவங்கி உள்ளது.

3_4_2

நேற்று போல் இன்றும் இந்தியாவில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்க கூடும்.  வெப்ப நிலை பல இடங்களில் 40 டிகிரி அளவை தாண்ட கூடும்.  குறிப்பாக மத்திய பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஓடிஸா மற்றும் உத்தர பிரதேசத்தில் சில பகுதிகளில் வெப்ப அலை நிலவ கூடும்.

தமிழகத்தை பொறுத்தவரை உட்புற பகுதிகளில் அனல் காற்று வீச கூடும் கடலோர பகுதிகளில் சற்றே குறைந்த நிலவ கூடிய வெப்ப நிலை கடந்த சில தினங்களை விட சற்றே உயர்ந்து காணப்படும்.  கரூர், திருச்சி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் பகல் நேர வெப்பம் 39 / 40 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.  சென்னை போன்ற கடலோர பகுதிகளில் பவல் நேர அதிகபட்ச வெப்பம் 35 / 36 டிகிரி அளவை எட்ட கூடும்.  மாலை நேரம் கடல் காற்று காரணமாக சற்றே மிதமான வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது