தமிழகத்தில் வெப்ப தாக்கம் தொடரும், கேரளாவில் மழை வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக உட்புற பகுதிகளில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. நேற்று தருமபுரி, சேலம், கரூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 39 டிகிரி அளவிற்கு இருந்தது.

கடலோர பகுதிகளில் மாத்திரம் கிழக்கிலிருந்து வரும் காற்று காரணமாக வெப்ப நிலை சற்று குறைந்து நிலவி வருகிறது.  வானிலை படிவங்களை சற்றே கூர்ந்து ஆராய்ந்தால் சித்திரை மாத பிறப்பை ஒட்டி தற்பொழுது நிலவி வரும் கிழக்கு காற்று தெற்கிலிருந்து வீச கூடும் என படிவங்கள் எதிர்பார்கின்றன. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் வெப்ப நிலை உயர ஆரம்பிக்கும்.

5_4

இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை உயர்ந்தே காணப்படும்.   உட்புற பகுதிகளில் அனேக இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலை 37 / 38 டிகிரி அளவை ஒட்டி நிலவ கூடும்.  சில இடங்களில் 39 / 40 டிகிரி அளவை எட்ட கூடும்.  கடலோர பகுதிகளிலும் இன்று வெப்ப நிலை சற்று உயர வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வெப்ப நிலை 35 / 36  டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.  புறநகர் பகுதிகளில் ஓரிரு டிகிரி அதிகமாக இருக்க கூடும்.