தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு

கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் பரவலாக வெய்யில் வாட்டி வதைத்து வருகிறது.  மேற்கு மற்றும் மத்திய தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பம் சற்றே அதிகமாக காணப்பட்டு வருகிறது. எல்லோரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதா என எதிர்பார்க்க துவங்கி உள்ளனர்.

நேற்று கேரளாவின் பல பகுதிகளிலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.  இன்றும் இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  மேற்கு கடலோர பகுதியை ஒட்டிய வாறு நிலவும் காற்று பிளவு கோடு காரணமாக இந்த மழை பெய்ய கூடும்.

6_4_1

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இந்த மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.  குறிப்பாக திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்ய கூடும்.  இதே போல் நீலகிரி மாவட்டம் மற்றும் அதனை ஒட்டிய வயநாடு பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளது.

6_4

ஏனைய தமிழக பகுதிகளில் வெய்யிலின் தாக்கம் தொடரும்.  உட்புற பகுதிகளில் பரவலாக பகல் நேர வெப்பம் 38 டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும். திருச்சி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் 39 / 40 டிகிரி அளவை எட்ட கூடும்.  கடலோர பகுதிகளில் கிழக்கில் இருந்து வரும் காற்று காரணமாக பகல் நேர வெப்பம் மிக அதிகமாக செல்லாமல் சற்று குறைந்தே நிலவி வருகிறது.  இது அடுத்த ஓரிரு வாரங்கள் வரை நீடிக்க கூடும்.