தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை வாய்ப்பு

கடந்த ஓரிரு நாட்களாக தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.  குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கோடை மழை நிலவி வருகிறது.  இதே போல் கேரளாவிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

பூமத்திய ரேகை அருகே நிலவி வரும் வெப்ப மண்டல அலை காரணமாக கீழை காற்றில் ஈரப்பதம் அதிகரித்து உள்ளது.  இதன் காரணமாக இலங்கை மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் நேற்று நல்ல மழை பெய்தது.   இன்று காலை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சில இடங்களில் இதனால் சாரல் மழை பெய்ய கூடும். கடலோர பகுதிகளில் பல இடங்களில் மேக மூட்டமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

7_4

பகல் பொழுதில் வெப்பநிலை உயர்ந்தே காணப்படும்.  உட்புற பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை பல இடங்களில் 38 டிகிரிக்கும் அதிகமாகவே நிலவ கூடும்.  சில இடங்களில் 40 டிகிரி வரை எட்ட வாய்ப்பு உள்ளது.   மாலை நேரத்தில் காற்றின் பிளவு கோடு காரணமாக தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரளாவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

பகல் பொழுதில் உருவாகும் வெப்பம் காரணமாக மாலை / இரவு நேரத்தில் மேற்கு உட்புற தமிழ்க் பகுதிகளில் சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது.  இது ஈரோடு , தருமபுரி மற்றும் ஓசூர் போன்ற பகுதிகளில் மழை கொடுக்க கூடும்.