நேற்று கோவை மாவட்டத்தில் மழை, இன்றும் உட்புற பகுதிகளில் தொடர கூடும்

நேற்று மாலை கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்யதது.  கோவையின் புறநகர் பகுதியான சர்கார்சாமகுலம் வேளாண் பல்கலைக்கழகம் தானியங்கி வானிலை மையத்தில் 52 மிமீ மழை பதிவாகியது.  இதே போல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியிலும் நல்ல மழை பதிவாகியுள்ளது.

இன்றும் கேரளா, தென் உட்புற கர்நாடகா மற்றும் மேற்கு தமிழகத்தின் உட்புற பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

9_4

மேற்கு கடலோர பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் நிலைகளில் ஏற்படும் காற்று பிளவு கோடு காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் மழை பெய்ய கூடும்.  இதே போல் கர்நாடகாவின் உட்புற பகுதிகளில் வலி மண்டல மேல் அடுக்கு காற்று சுழற்சி காரணமாக காற்றில் ஓர் நிலையற்ற தன்மை உருவாக வாய்ப்பு உள்ளது.  இந்த நிலையற்ற தன்மை பகல் பொழுதில் ஏற்படும் வெப்பத்தின் காரணமாக மேலும் ஸ்திரமற்ற நிலை ஏற்படுவதால் உட்புற பகுதிகளில் ஒரு சில இடங்களில் சற்றே பலத்த மழை பெய்ய கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

இது தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று இரவு பொழுதில் நல்ல மழை பெய்ய கூடும்

ஏனைய தமிழக பகுதிகளில் பரவலாக வறண்ட வானிலை நீடிக்க கூடும். ஆனால் வெப்ப நிலை கடந்த சில தினங்களை விட சற்று குறைந்த காண வாய்ப்பு உள்ளது.