உட்புற தமிழகத்தில் இன்று முதல் வறண்ட வானிலை, அதிகரிக்கும் வெப்பம்

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் உட்புற பகுதிகளில் ஆங்காங்கே மாலை / இரவு பொழுதில் மழை பெய்து வந்தது.  வெய்யில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த கோடை மழை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மழையின் காரணமாக வெப்ப நிலையம் சற்று தணிந்து காணப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் மீண்டும் வெப்ப நிலை உயர கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன. வெப்ப நிலை உயருவது மட்டுமல்லாமல் மழைக்கான வாய்ப்பும் குறைந்தே காணபடுகிறது.

Slide15

தமிழகத்தின் உட்புற பகுதிகளில் அதிகபட்ச பகல் நேர வெப்ப நிலை 38 / 39  டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும் என படிவங்கள் காட்டுகின்றன.   வட தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப நிலை 40 டிகிரி அளவை எட்ட கூடும்.  தற்பொழுது வானிலை படிவங்கள் கடலோர பகுதிகளில் வெப்ப நிலை 35 / 36  டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும் என கூறினாலும் இது காற்றின் திசை பொறுத்தே இருக்க கூடும்.  தென்மேற்கில் இருந்து வரும் காற்று பகல் பொழுதில் அதிக நேரம் வீசினால் வெப்ப நிலை அதிகரிக்க கூடும்

இந்த வாரம் முழுவதுமே வெப்ப நிலை உயர்ந்தே இருக்க கூடும், தமிழ் புத்தாண்டை ஒட்டி மிக அதிகமாக இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன