சென்னையில் கோடைக்காலம், வெப்ப நிலை இன்று ஓரிரு டிகிரி உயர வாய்ப்பு

தற்பொழுது வரை இந்தியாவின் பரவலாக வெப்ப நிலை உயர்ந்து இருந்த போதிலும் கிழக்கில் இருந்து வரும் கடல்காற்று காரணமாக சென்னையில் வெப்ப நிலை ஓரளவு மித பட்டு நிலவி வந்தது.  மார்ச் மாதத்தில் ஒரு சில தினங்கள் வெப்ப நிலை சென்னை விமான நிலையத்தில் உள்ள வானிலை மையத்தில் 37 / 38 டிகிரி அளவை எட்டியது இதை தவிர ஏனைய நாட்களில் வெப்ப நிலை பரவலாக 35 / 36  டிகிரி அளவை ஒட்டியே இருந்ததது.

இந்த நிலை வரும் நாட்களில் மாற கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.  தற்பொழுது வரை காற்றின் திசை கிழக்கில் இருந்தே வீசி வந்ததது இனி முற்பகல் பொழுதில் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீச கூடும் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் காரணமாக கடல்காற்று மாறி நிலகாற்று வீச கூடும்.  இது வெப்ப நிலையை அதிகரிக்க செய்து பகல் பொழுதில் வெப்பத்தின் தாக்கத்தை மிகைபடுத்தும்.

12_4

அடுத்த சில தினங்களுக்கு சென்னையில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தை விட ஓரிரு டிகிரி உயர்ந்தே காணப்படும்.  நகரத்தின் மத்திய பகுதிகளில் வெப்ப நிலை 36 / 37 டிகிரி வரை எட்ட கூடும்.   விமான நிலையத்தில் உள்ள வானிலை மையம் 38 டிகிரி வரை எட்ட கூடும்.  தமிழகத்தில் உட்புற பகுதிகளில் வெய்யிலின் தாக்கம் மிகவும் அதிகமாக நிலவ கூடும்.  பல இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 39 / 40 டிகிரி அளவை ஒட்டியே இருக்க கூடும்.  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் கடலோரத்தில் சில பகுதிகள் தவிர ஏனைய தமிழகத்தில் பரவலாக 36  டிகிரி அளவை தாண்டியே இருக்க கூடும்.