தமிழகத்தில் நேற்று வெப்ப தாக்கம், இன்றும் நிலவ கூடும்

நேற்று தமிழகத்தில் வெப்ப தாக்கம் நிலவியது.  இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பம் பல இடங்களில் பதிவாகியது.   வேலூர், திருச்சி, திருத்தணி மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 41 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது.  இதே போல் சேலம், மதுரை, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் பாளையம்கோட்டை பகுதிகளில் 40 டிகிரி வெப்ப நிலை பதிவு ஆனது.  சென்னையின்  நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் வானிலை மையங்கள் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்ப நிலையை நேற்று பார்த்தது.

14_1_2

நாம் வெப்ப நிலையை ஆராய்ந்தோம் எனில் தமிழகத்தில் பரவலாக வழக்கத்தை விட 2 / 3 டிகிரி அதிகமாக நிலவி வருகிறது. தென் தமிழக கடலோர பகுதிகளில் தவிர வெப்ப நிலை அதிகமாவே உள்ளது.  இன்றும் இதே நிலை நீடிக்க கூடும்.  இதே போல் தென் இந்தியாவின் உட்புற பகுதிகளில் அனேக இடங்களில் அசாதரண வெப்ப நிலை நீடித்து வருகிறது. நேற்று கர்நாடகா பிதர் பகுதியில் வழக்கமான வெப்பத்தை விட 5 டிகிரி அதிகமாக இருந்தது.

14_1

இன்றும் தமிழகத்தின் உட்புற பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரியை ஒட்டியே இருக்க கூடும்.  வட மற்றும் மத்திய தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப நிலை 41 டிகிரி வரை எட்ட கூடும். கடலோர பகுதிகளில் வெப்ப நிலை 36 / 37  டிகிரி அளவை ஒட்டி இருக்க கூடும்.