தமிழகத்தில் கோடைகாலம் தீவிரம்

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கோடைகாலம் தீவிரம் அடைய துவங்கி உள்ளது.  சென்னையில் நேற்று இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியது.  இதே போல் தருமபுரியில் ஏப்ரல் மாதத்தின் வரலாற்றில் மிக அதிக வெப்ப நிலையான 41 டிகிரி நேற்று தொட்டது.

ஏறக்குறைய தமிழக எல்லைக்குள் [அட்ச ரேகைக்குள் ] சூரியன் வந்து விட்டதால் வெப்பத்தின் தாக்கம் மிகுதியாய் உணரப்படும்.  வெப்ப அலை / அனல் வீசும்.
1. மக்கள் நண்பகல் 12 மணிக்கு மேல் மாலை 3 மணி வரையில் வெயிலில் செல்வதை தவிர்க்கவேண்டும்.
2. பகல் நேரத்தில் குடை எடுத்து செல்ல வேண்டும். அல்லது தலைக்கு தொப்பியோ அன்றி முண்டாசோ கட்டிக்கொள்ளல் வேண்டும்.
3. நன்னீரை / தண்ணீரை அவ்வப்போது பருகுதல் வேண்டும். வியர்வையில் உடலில் இருந்து அதிகம் உப்பு வெளி ஏறுவதால் உடலில் நீர் சத்து குறைந்து “கால்களில் தசை பிடிப்பு” ஏற்படும்.  அதற்கு உப்பும் சக்கரையும் கலந்த நீரை ஓரிரு முறை அருந்தல் வேண்டும்.
4. மக்கள் கூடும் இடங்களில் உயரமாய் அம்பாரி பந்தலிட்டு நிழல் ஏற்படுத்தியும் தண்ணீர் பந்தல் அமைத்தும் முறைப்படுத்த வேண்டும்.

15_1_2

இன்றும் தமிழகத்தில் பரவலாக வெப்ப நிலை சராசரி அளவை காட்டிலும் அதிகமாக நிலவ கூடும்.  குறிப்பாக உட்புற பகுதிகளில் 3 / 4 டிகிரி வரை வெப்ப நிலை அதிகரித்து காணப்படும்.  தமிழகத்தில் பரவலாக இன்று பகல் நேர அதிக பட்ச வெப்ப நிலை 38 / 39 டிகிரி அளவில் இருக்க கூடும்.  சில இடங்களில் 40 டிகிரி அளவை தாண்டி வெப்ப அலை வீச கூடும்.  சென்னையில் வெப்ப நிலை 37 டிகிரி அளவில் இருக்க கூடும், புறநகர் பகுதிகளில் வெப்பம் சற்றே உயர்ந்து உணரப்படும்.

15_1_3

தெலுங்கானாவில் வெப்ப அலை மிக அதிகமாக இருக்க கூடும், சில இடங்களில் பகல் நேர வெப்பம் 45 டிகிரி வரை இருக்க கூடும் என்பதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.