தென் தமிழ் நாட்டில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு

கடந்த சில தினங்களாக வாட்டி வதைத்த வெப்பத்தின் தாக்கம் நேற்று சற்று குறைந்து நிலவியது.  தமிழகத்தில் தருமபுரியில் மட்டும் 40 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவாகியது. ஏனைய இடங்களில் வெப்ப நிலை 40 டிகிரிக்கும் கீழ் இருந்தது.  கடலோர பகுதிகளில் கிழக்கில் இருந்து வரும் காற்று காரணமாக வெப்ப நிலை சற்றே மித படுத்தப்பட்டது.

இன்றும் பரவலாக உட்புற பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் நிலவ கூடும்.  நேற்று போல் சற்று குறைந்தே காணப்படும்.  வெப்ப நிலை 38 / 39  டிகிரி அளவில் பரவலாக பதிவு ஆகக்கூடும். ஓரிரு இடங்களில் குறிப்பாக மேற்கு தமிழக பகுதியில் வெப்ப நிலை  40 டிகிரி அளவை எட்ட கூடும்.  கடலோர பகுதிகளில் வெப்ப நிலை 35 / 36 டிகிரி அளவை ஒட்டியே நிலவ கூடும்.

18_4

இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்க கூடும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன.

தென் தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு பகுதிகளில் இன்று காற்றின் ஸ்திரமற்ற நிலை காரணமாக ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது.  குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை வாய்ப்பு இருக்க கூடும்.