வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த பகுதி –

ஆந்திரா கரை அருகே வங்க கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான தட்ப வெப்பம் நிலவி வருகிறது. சில பகுதிகளில் அவ்வப்பொழுது மழையும் / சாரல் மழையுமாக மிக அருமையான சீதோஷணம் மக்களை கோடை வெப்பத்தை மறக்க செய்து உள்ளது.

இந்த குறைந்த அழுத்த காற்று தாழ்வு பகுதி காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்காணா பகுதிகளில் பலத்த மழை பெய்ய கூடும். இது வலு பெற்று வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து பருவ நிலை தாழி பகுதியுடன் இணைய கூடும்.

Weather_map

இந்த நிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்க கூடும். மேலும் வட தமிழத்தில் சில இடங்களில் அவ்வப்பொழு மழை பொழிய கூடும். ஓரிரு இடங்களில் மதிய / மாலை நேரங்களில் பலத்த மழை பொழிய கூடும்.