வட தமிழகத்தில் வெப்ப அலை வாய்ப்பு

நேற்று தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக நிலவியது.  இந்த ஆண்டில் முதல் முறையாக திருத்தணியில் 43 டிகிரி அளவை வெப்பம் தொட்டது.  இதே போல் வேலூர், திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்ப நிலையை எட்டியது.  இந்த நிலை மேலும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்க கூடும்.

23_4_2

வடமேற்கிலிருந்து வரும் தரை காற்று காரணமாக இந்த வெப்ப நிலை மிக அதிகமாக இருக்க கூடும்.  குறிப்பாக தென் ஆந்திரா மற்றும் வட தமிழக பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்க கூடும்.  கிட்டத்தட்ட மாலை மூன்று மணி வரை கடல்காற்று வருவதற்கு சாத்தியகூறு குறைவாக இருப்பதால் வெப்ப நிலை காலை 11:00 மணி வரை 3:00  மணி வரை வட தமிழகத்தின் பல இடங்களில் வெப்ப நிலை 39 / 40  டிகிரி அளவை ஒட்டியே இருக்கும்.

23_4_1

இன்று திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் வெப்ப நிலை மிக அதிகமாக நிலவ கூடும்.  நேற்று போல் திருவள்ளூர் / திருத்தணி பகுதிகளில் அதிக பட்ச வெப்ப நிலை 43 / 44  டிகிரி அளவை ஒட்டியே இருக்க கூடும்.  சென்னை புறநகர் பகுதிகளில் வெப்ப நிலை நகரத்தை விட ஓரிரு டிகிரி அதிகமாக இருக்க கூடும்.